Translate

Monday, 22 February 2016

Raja Raja Cholan - The Other Side


இராஜராஜ சோழனின் மறுபக்கம்...

2 comments:

  1. எல்லா அரசர்களும் தங்களிடம் தோற்ற எதிரி நாட்டு வீரர்களை சிறைபிடிப்பர். அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காகவே கோவில்கள் அரண்மனைகள் கட்டினர். இன்றும் சிறையில் கைதிகளுக்கு அன்றாடம் வேலை உண்டு. பாண்டியர் சேரர் சோழர் மூவரும் ஒருவருக்கொருவர் போர்புரிந்து பிறர் நாட்டை கைப்பற்றியவர்கள்தான். நீங்கள் சோழன் மட்டுமே கைப்பற்றியதைபோல் சித்தரிக்கிறீர். உங்கள் கூற்றின்படி பார்ப்பனர்கள் என்றால் ஆரிய வழி வந்தவர்கள் திராவிடத்தை சார்ந்தவர்கள் அல்லர். ஆனால், ஆரியர்கள் வாழும் இன்றைய வடஇந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிளும் எல்லா மக்களும் கருவறைக்குள் உள்ள கடவுளை தொட்டு வழிபடலாம். இதிலிருந்தே பார்ப்பனர்கள் பற்றிய உங்கள் கருத்து தவறென்பது புரிகிறது.
    தமிழ் மொழி வளர்ச்சியைப்பற்றி நீங்கள் கூறியது மிகவும் சிரிப்பாக உள்ளது.சோழர் காலம் வரை இங்கு இன்றைய இந்து மதம் மட்டுமே இருந்தது. அதற்கு சிறந்த சான்று தமிழ் இலக்கியங்கள். மேலும் அன்றைய நாட்களில் மொழியை கடவுளாக போற்றினர். எனவே தேவாரம் திருவாசகம் சைவத்தை வளர்க்கவே என்று கூறினாலும் தவறில்லை.கோவில் கருவறைக்குள் தமிழ் வரவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. திருமந்திரம், தேவாரம், பெரிய புராணம், திருவாசகம், கந்தர் அனுபூதி, கந்தர் கவசம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்ற அனைத்தும் வழிபாட்டு பாடல்களே. அதுவும் தமிழில் இயற்றபட்டதே.
    கோவிலை கட்டிய தமிழ்மக்கள் கருவறைக்கு வெளியே என்று கூறியதும் வேடிக்கையே. ஏனென்றால் வேற்றுமையை வேறருக்க வேண்டும் என்றே தமிழில் உள்ள இறைபாடல்களும் சமஸ்கிருதத்தில் உள்ள ஸ்லோகங்களும் கூறுகிறது. இதற்கு எ.கா. திருமூலர் மற்றும் இராமானுஜர்.

    சமஸ்கிருதமும் தமிழைப் போன்ற ஒரு மொழியே. இன்று சமஸ்கிருதம் என்ற மொழி பேச்சுவழக்கில் இல்லை. புறநானூறு அகநானூறு திருக்குறள் நாலடியார் போன்ற படைப்புகளே வேதங்களும் கிரந்தங்களும். ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு படைப்பு. மொழியை மதமாக பார்ப்பது நம் தவறு.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு பண்பாடு பழக்கவழக்கம் உண்டு. அதனால்தான் அந்த பழக்கவழக்கத்தை பின்பற்றும் ஒரு இனமே கருவறைக்குள் உள்ளது. கோவில் வழக்கத்தை பின்பற்ற விரும்பும் அனைவரும் கருவறைக்குள் செல்லலாம் என்றே இதிகாசமும் புராணமும் எடுத்துறைக்கிறது.

    ReplyDelete
  2. Continue...
    இராமயணமும் மகாபாரதமும் உண்மை என்பதற்கான சான்றுகள் உள்ளன. இராமன் உலகில் வாழ்ந்த ஒரு அரசன். இராவணன் தமிழ் அரசன் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். இராவணன் என்ற பெயரே சமஸ்கிருதம். இராவணன் வேதங்களை கற்றவன். இன்றைய இங்கையில் தமிழ் பேசப்படுகிறது. அதற்காக இலங்கையில் தமிழே சங்ககாலத்தில் இருந்து பேசப்படுகிறது என்று எப்படி கூறுவது? மேலும் இராமாயணத்தை தவிற எந்த மற்ற படைப்பிலும் இராவணணைப் பற்றி தகவல்கள் ஏதும் இல்லை. இலங்கையில் பெளத்த மதம் பின்பற்றப்படுகிறது. இதனால் தமிழர்கள் பெளத்தர்கள் என்று கூறமுடியுமா?

    உங்கள் கூற்றின்படி இராஜஇராஜன் காலத்தில் இராமாயணமும் மகாபாரதமும் பரப்பப்பட்டது என்று கூறுயிருக்கிறீர்கள். ஒரு மன்னன் மற்ற மன்னர்களின் பெருமையை எப்படி தன் நாட்டு மக்களிடையே பரப்புவான். சற்றே நீங்கள் சிந்திக்க வேண்டியது.

    சாதிமுறை சோழர்காலத்தில் பிரபலப்படுத்தப்பட்டது. சரி, அதே சோழர் காலத்தில் சாதி பிரிவினை கூடாது என்று இராமானுஜர் போன்ற சில பார்ப்பனர்கள் கதாகாலஷேமம் செய்ததை ஏன் நீங்கள் கூறவில்லை?

    நான் மேலே கூறியுள்ளதைப்போல் வேதங்கள் திருக்குறள் புறநானூறு அகநானாறு போல் வாழ்க்கை நெறியையே வெவ்வேறு கோணங்களில் கூறுகிறது. மேலும் அன்றயை கல்வி கூடங்களில் வேதங்கள் ஒரு படிப்பாக ஒரு முதுகலை பட்டமாக இருந்திருக்க வாய்புண்டு.

    தேவதாசி என்றால் என்ன என்பதை சற்று ஆராய்ந்து பேசவும். தாசிக்கும் தேவதாசிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தேவதாசிகளான பெண்களுக்கு அனைத்து மரியாதைகளும் வழங்கப்பட்டது என்பதற்கு இலக்கியங்களும் கல்வெட்டுகளும் சான்றாக உள்ளது. தேவதாசிகள் கோவிலில் தற்கொலை செய்து கொண்டதாக எந்த ஆதாரமும் தமிழின் இலக்கியங்களில் இன்றுவரை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    வெள்ள காலத்தில் தன் ஊரை, ஊர் மக்கள் மற்றும் ஆநிரைகளை காக்கவும் நீர் பற்றார்குறையை தடுக்க தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தவும்தான் அணை கட்டப்பட்டது. அன்று கர்நாடகம் என்ற ஊர் இல்லை. மக்களும் சுயநலவாதிகளாக இல்லை.காலம் தவறாமல் மாரி பொழிந்தது காவிரியும் வற்றாது ஓடியது. இன்று இவையனைத்துமே இல்லை என்பது வருத்தமான ஒன்றே. மேலும் இன்று எவ்வாறு கணினி, ஸ்மார்ட் போன் முறை பிரபலமோ அதேபோல் அன்று இராஜஇராஜன் காலத்தில் மக்களிடம் கடவுள் வழிபாட்டு முறையே மேலோங்கியிருந்தது.

    மகாமகம் கொண்டாட அரசாங்கம் கோடிகளை செலவிட காரணம் கோவில்கள் அரசுடைமையாக உள்ளதால். அறநிலையத்துறை என்ற பெயரில் கோவில்களின் வருமானத்தை மட்டும் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் ஓரவஞ்சனை. இதனால்தான் கிறுஸ்துமஸ் விழாவிற்கோ அல்லது சந்தனக்கூடு விழாவிற்கோ அரசு கோடிகளை செலவிடுவதில்லை.

    உங்கள் ஆடியோவை பலர் பகிர்ந்திருக்கலாம் பலர் சரி என்று எண்ணியிருக்கலாம். ஆனால், நீங்கள் கூறும் குற்றங்களுக்கான போதிய ஆதாரம் வழங்கவில்லை.

    - சங்கர நாராயணன்.சீ

    ReplyDelete